போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான அடைக்கலராஜ் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம்!!

12 August 2020, 5:51 pm
Drug Smuggling Arrest - Updatenews360
Quick Share

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அடைக்கல ராஜ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் டவுனைச் சேரந்தவர் அடைக்கலராஜ் (40), தனது நண்பர்களுடன் வந்து கொண்டிருந்த போது, அவரது காரை போதைப்பொருள் கடத்தல் பிரிவு தடுப்பு பிரிவு மற்றும் ஓருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ரூ. 10 லட்சம் மதிப்பிலானகாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ அபின் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அடைக்கல ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், பா.ஜ.க., நிர்வாகியான அடைக்கல ராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெரம்பலூர்‌ மாவட்டம்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ அணியின்‌ மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ P. அடைக்கலராஜ்‌ அவர்கள்‌ கட்சிக்‌ கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம்‌ விளைவிக்கும்‌ செயல்களில்‌ ஈடுபட்டதால்‌, கட்சியின்‌ பொறுப்பில்‌ இருந்தும்‌, அடிப்படை உறுப்பினரிலிருந்தும்‌ உடனடியாக நீக்கப்படுகிறார்‌.

ஆகவே கட்சியின்‌ நிர்வாகிகள்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌ அவரிடம்‌ எவ்வித தொடர்பும்‌ வைத்துக்‌ கொள்ள வேண்டாம்‌ என அறிவுறுத்தப்படுகின்றது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 9

0

0