முன்ஜாமீன் ரத்து… மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக நிர்வாகி சென்னையில் கைது : என்னதான் நடந்தது..? முழு விபரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 2:34 pm

அரசு குறித்து போலி தகவல்களை பரப்பியதாக பாஜக நிர்வாகி சவுதா மணி கைது செய்யப்பட்டார்.

நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்தையும்,பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த வேளையில், இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேசும் வீடியோவை தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனால்,அவர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து,இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்தார். ஆனால், இவரது செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி, முன் ஜாமீன் கேட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் போலி தகவல்களை பதிவிட்டதாக கூறி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சவுதா மணி மீது வழக்குபதிவு செய்திருந்த நிலையில், தற்போது அவரை சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் செய்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?