பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா மகன் திடீர் கைது : மதுபோதையில் பெண் காவலரிடம் ரகளை…!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 1:30 pm

முன்னாள் எம்பியும் பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதிப்ராஜ்.இவர் சென்னை விருகம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தர் .

அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அவரை சோதனையிட முயன்றார். அப்போது பிரதிப் ராஜ் , அந்த பெண் காவலரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. எனவே போலிசார் வழக்கு பதிவு செய்து பிரதிப் ராஜை கைது செய்தனர்.

ஆனால் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்ததால் அவரை வீட்டிற்கு அனுப்பிய போலிசார் ,மீண்டும் இன்று காலை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?