ராமேஸ்வரம் TO சென்னை… சுமார் ஒரு லட்சம் பேர்… அண்ணாமலையின் அடுத்த ஆக்ஷன்.. பாஜக பிரமுகர் பால் கனகராஜ் சொன்ன தகவல்!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 4:06 pm

2023 ஜூலை 28 தொடங்கி 2024 ஜனவரி 1 முதல் ராமேஸ்வரம் தொடங்கி தலைநகர் சென்னை வரை ‘என் மண்.. என் மக்கள்’ என்ற நோக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து தமிழக பாஜக மாநில துணைத்தலைவர்கள் த எம் சக்கரவர்த்தி, பால்கனக ராஜ், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் டிஜிபியை சந்தித்து அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ளும் இடங்களின் விவரம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு கோரி மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் கூறயதாவது:- தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகின்ற 28. 07.2023 அன்று என் மண் என் மக்கள் என்கின்ற தலைப்பில் பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார். ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கி 01.02.2024 தலைநகர் சென்னையில் பாதயாத்திரை முடிய உள்ளது.

எந்தெந்த இடங்களுக்கு பாதயாத்திரை செல்கிறார் என்பது குறித்து நானும் நானும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரும் டிஜிபி அவர்களை சந்தித்து எந்தெந்த இடங்களுக்கு பாதயாத்திரை அண்ணாமலை அவர்கள் மேற்கொள்கிறார் என்பது குறித்தும் பாதயாத்திரையின் போது, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளோம்.

மேலும், அந்தந்த மாநில எஸ்பிக்கள் கமிஷனர்களிடம் எந்த சாலை வழியாக எந்த பகுதி வழியாக அண்ணாமலை செல்கிறார் என்பது குறித்து மாவட்ட எஸ்பிக்கள் கமிஷனர்களிடம் விரைவில் தர இருக்கிறோம். தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை என்பது தமிழர்களுடைய எழுச்சிக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் ஊழலை அறவே ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும், என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரையை அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதற்கு ஏராளமான இளைஞர்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். எந்த கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் இளைஞர்களிடையே அண்ணாமலை அவர்களுக்கு புதிய வரவேற்பு இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். பாதயாத்திரை தொடக்க விழாவில் ஒரு லட்சம் பேரும் பாதயாத்திரையின் போது அண்ணாமலையுடன் சுமார் 5,000 பேரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.

மக்களுடைய வளத்திற்காகவும் மண்ணினுடைய வளத்திற்காகவும் கால்நடையாக சிறு தூரமும், தொலைதூரத்திற்கு காரிலும் மூன்று பிரிவுகளாக இடைவெளி விட்டு பயணம் செய்ய அண்ணாமலை அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை என் மண் என் மக்கள் என்பதை நோக்கமாகக் கொண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு சிறப்பாக இந்த பாதயாத்திரை நடைபெற இருக்கிறது.

ராமேஸ்வரம் தமிழ்நாட்டின் கடைக்கோடி அங்கிருந்து தலைநகரில் பாதயாத்திரை முடியயிருக்கிறது. 2024ஆம் தேர்தலில் இந்த பாதயாத்திரை வளம் கொடுக்கும் எனவும் இதன் பலன் தேர்தலிலே அறுவடை செய்யப்படும். அந்தந்த மாவட்டத்தில் இருக்கிறவர்கள் அண்ணாமலையுடன் பாதை யாத்திரையின் போது பயணிப்பார்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது, எனக் கூறினார்.

ஆளுநர் குறித்த கேள்விக்கு, யாருக்கும் சாதகமாக இருந்து செயல்பட வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை. ஆளும் தரப்பினரை சில கேள்விகள் கேட்கின்றார், சட்டப்படி அவர்கள் அனுப்புகிற கோரிக்கைகளுக்கு பதில் கேட்டு திரும்ப அனுப்புகிறார், என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!