அப்பாவுக்கு வெச்சாரு பாரு பெரிய ஆப்பா… விஜய் பேச்சை வைத்து முதலமைச்சரை சாடிய பாஜக பெண் பிரமுகர்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2025, 6:46 pm

மதுரை பாரபதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய தவெக தலைவர் விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய அவர், “தவறு செய்தால், அதை அறிந்து செய்தால், அது கபட நாடகம். அது மு.க.ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்!” என்று தெரிவித்தார்.

“உங்கள் ஆட்சி ஊழல் இல்லாமல் நேர்மையாக உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? பதில் சொல்லுங்கள், அங்கிள்! பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் கதறும் குரல் ஸ்டாலின் அங்கிளுக்கு கேட்கவில்லையா? பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல், அவர்கள் தன்னை ‘அப்பா’ என்று அழைப்பதாகக் கூறுகிறார். ஸ்டாலின் அங்கிள்… இது மிகவும் தவறு, மிக மோசமானது, அங்கிள்!” என்று விஜய் கடுமையாக விமர்சித்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல், அவர்கள் தன்னை ‘அப்பா’ என்று அழைப்பதாகக் கூறுகிறார். ஸ்டாலின் அங்கிள்… Its Very Wrong Uncle, very worst unccle என விஜய் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து பாஜக பிரமுகர் கஸ்தூரி போட்ட பதிவில், அப்பாவுக்கு வெச்சாரு பாரு பெரிய ஆப்பா !இனிமே ஸ்டாலின் அங்கிள் ஒர்ஸ்ட் அங்கிள் கோஷம்தான் !

திமுகவை ஓங்கி அடிச்சவரு, பாஜகவை ஓரமா கடிச்சவரு, MGR பாட்ட பாடி செய்வீர்களா செய்வீர்களா என்கிறார்.பாஜகவை விட்டு எங்க பக்கம் வாங்கன்னு அதிமுகவுக்கு ஓபன் அழைப்பு வச்சுருக்காரு வேற.. என பதிவிடடுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!