வங்கி மேனேஜரை காலணியால் தாக்கிய பாஜக பிரமுகர்… கைது செய்து போலீசார் நடவடிக்கை ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
14 March 2024, 6:47 pm

வங்கி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்த நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இணைந்த ஏடிஎம் மையத்தில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் (35) பணம் எடுக்க நேற்று சென்றுள்ளார். அப்போது, அந்த ஏடிஎம் மையத்தில் டெல்லியிலிருந்து வந்திருந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஏடிஎம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது. அபிலேஷ் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை மிஷினில் செலுத்தி இருக்கின்றார். இதனால் வங்கி ஊழியர் மெஷின் சர்வீஸ் செய்வததாகவும். பணம் எடுக்கக் கூடாது என கூறியுள்ளார். அதை மீறியும் அபிலேஷ் ஏடிஎம் கார்டை போட்டு உள்ளார். இதை பார்த்த வங்கி உதவி மேலாளர் பிரதீப் வந்து கேட்டபோது, வங்கி உதவி மேலாளரை அசிங்கமாக திட்டி கைகளால் அபிலேஷ் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மனவள நகர் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிலேஷை கைது செய்து ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தன். பின்னர், கைது செய்யப்பட்ட பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலேஷை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து விடுதலை செய்தது.

இந்த நிலையில், வங்கி ஏடிஎம்மிற்குள் மெஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது பணம் எடுக்க முடியாது என கூறிய வங்கி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகரால் பரபரப்பு வங்கி மேலாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?