பாஜக கொடிக்கம்பம் விவகாரம்… நடிகை கஸ்தூரி போட்ட பதிவு : நெட்டிசன்கள் வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 10:54 am

பாஜக கொடிக்கம்பம் விவகாரம்… நடிகை கஸ்தூரி போட்ட பதிவு : நெட்டிசன்கள் வரவேற்பு!!

சென்னையை அடுத்த பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இந்த வீடு அருகே இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலம் அமைந்துள்ளது.

அண்ணாமலையின் வீடு முன்பாக பிரம்மாண்ட கொடி மரம் ஒன்று நடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட அந்த கொடி மரத்தை போலீசார் அகற்ற முயற்சித்தனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் நடைபெற்ற நிலையில் நடிகை கஸ்தூரி தமது எக்ஸ் பக்கத்தில், கொடி பறக்கட்டும்! இடி ஒலிக்கட்டும்! அலை அடிக்கட்டும் மலை ஜெயிக்கட்டும் ! கதை முடிக்கட்டும் ! அறம் பரவட்டும்! என பதிவிட்டிருந்தார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பதிவு யாருக்கானது? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் அவரது பக்கத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். 10 மணிநேரத்தில் சுமார் 70,000 பேர் இந்த பதிவை பார்வையிட்டிருந்தனர்.

இப்பதிவு குறித்த விவாதம் நடைபெற்ற தருணத்தில், பாஜக கொடி கம்ப விவகாரத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவமும் கஸ்தூரியின் எக்ஸ் பதிவு தொடர்பான விவாதத்தில் இணைந்து கொண்டது.

மேலும் @sridharderd என்ற நெட்டிசன் கஸ்தூரியின் எக்ஸ் பக்கத்தில், கொடி வீழட்டும்.! இடி ஓயட்டும்.! அலை அமுங்கட்டும்.! மலை மடுவாகட்டும்.! கதை முடியட்டும்.! பாசிசம் ஒழியட்டும்.! பாஜக முடியட்டும்.? அறம் பரவட்டும்.! அன்பு தழைத்தோங்கட்டும்.! என பதில் கவிதையை பகிர்ந்துள்ளார். பாஜகவினரோ, நன்றி அக்கா எனவும் பதிவிட்டிருக்கின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!