அமித்ஷாவை சந்தித்த பாஜக பிரமுகர் திடீர் கைது : தொழிலதிபர் கொடுத்த பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2025, 1:09 pm

சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே ஆர் வெங்கடேசன்
இவர் மீது ஏற்கனவே தமிழக காவல்துறை மற்றும் ஆந்திராவில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் பாஜக கட்சியில் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நிலையில் தற்போது ஓ பி சி அணி மாநில செயலாளராகவும் அவர் பதவி வகித்து வருகிறார்.

இதையும் படியுங்க: தாயின் புடவையில் மடிந்த +1 மாணவன்.. நெஞ்சை பதற வைத்த சோக சம்பவம்!

இந்நிலையில் சமீபத்தில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ பி சி அணி மாநில செயலாளரான அவர் வரவேற்பு குழுவில் இடம் பெற்று இருந்த நிலையில் அவரை மதுரை விமான நிலையத்தில் சந்தித்து சால்வை வழங்கி வாழ்த்து பெற்ற நிலையில் செங்குன்றம் காவல்துறையினர் தற்போது அவரை வீட்டிற்கே சென்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BJP leader who met Amit Shah suddenly arrested: Businessman files sensational complaint

கேஆர் வெங்கடேசன் மீது ஏற்கனவே உள்ள பழைய வழக்குகளுக்காக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என கூறப்படுகிறது.

தொழிலதிபர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பஞ்சயத்து நடத்தியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!