எதுக்கு இந்த பொய், பித்தலாட்டம்? பழி போடுவதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் : காங்., தலைவர் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2025, 3:54 pm

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-வல்லக்கோட்டை முருகன் கோவில் விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நல்லாட்சி நடக்கும் போது அதிகாரிகள் செய்யும் தவறால் ஆட்சிக்கு எந்தவித களங்கமும் ஏற்பட்டு விட கூடாது உறுதியாக இருக்கிறேன்.

ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறால் பிரச்சனை ஏற்படுகிறது. அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது இனி வரும் காலங்களில் இது போன்ற அவலங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சில துறைகளில் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தான் ஆட்சியாளர்களுக்கு களங்கம் ஏற்படுகிறது. முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் அதிகாரிகள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

மதுரை ஆலயத்தில் தலீத் மக்களுடன் மகாத்மா காந்தி உத்தரவின் பேரில் வைத்திய நாதர் அய்யர் ஆலய பிரவேசம் செய்த நாள்.

அதிமுக ஆட்சி காலத்தில் கஞ்சா வழக்கு இல்லையா? கொலைகள் எதுவும் நடக்கவில்லையா? அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட திமுக ஆட்சியில் விகிதாச்சாரம் குறைவு தான் குறைவாக நடந்தது என்று விட்டு போக முடியாது. இதை கட்டுபடுத்த தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் கூட்டம் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கோபுரத்தின் மேல் நின்று கலந்து கொண்டார்.

என் தொகுதிக்கு வந்ததால் அவருக்கு வணக்கம் சொன்னேன் அதிகாரிகள் அவரை நன்கு கவனித்தனர். ஆனால் சிறப்பு வழி கதவு திறக்க காத்திருந்ததாக பதிவு போட்டு உள்ளார்.

பொய், பித்தலாட்டத்திற்கும் பெயர் போனவர்கள் பா.ஜ.க.வினர். சிறப்பு வழியை நீதிமன்றம் எடுத்து பல ஆண்டுகள் ஆகிறது. யாருக்கும் சிறப்பு வழி கிடையாது. நான் மக்களுடன் எளிமையாக இருப்பவன். சிறப்பு தரிசனத்திற்கு செல்வது கிடையாது.

பா.ஜ.க தலைவர்கள் பொய் சொல்லி வாழாமல் விலகி வர வேண்டும். 2007ல் கலைஞர் ஆட்சிக்காலத்தில் பரிவட்டம் கட்டுவதை எடுத்து விட்டார். இந்த புரிதல் இல்லாமல் ஆளுநராக இருந்தவர் பேசலாமா? பழி சொல்லி ஏதாவது பேசுவதை பா.ஜ.க. தலைவர்கள் தவிர்க்க வேண்டும் வல்லக்கோட்டை முருகன் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளன. அவற்றை பார்த்தால் தெரியும்.

என் தொகுதியில் எங்கள் கட்சி தலைவரின் மகள் அவருக்கு சிறப்பு செய்தது மகிழ்ச்சி தான். பெருந்தன்மையாக வந்தேன். 2 துணை கமிஷனர்கள் அவருடன் இருந்தார்கள். ஆனால் என்னுடன் ஒரு உதவியாளர் கூட கிடையாது. மக்கள் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குற்றச்சாட்டு சொல்வதோ இல்லை.

எடப்பாடி பிரச்சாரத்தில் அண்ணாமலை மட்டுமில்லை செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கொங்கு மண்டல தளபதியாக இருந்தவர் ஏன் கலந்து கொள்ளவில்லை. அதிமுக-பா.ஜ.க. பொருந்தாத கூட்டணி. இதை அதிமுக தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்.ஜெயலலிதாவை அண்ணாமலை திட்டாத திட்டே கிடையாது. அவர் மன்னிப்பு கேட்டார்.

பெரியார், அண்ணாவை முருக மாநாட்டில் சர்ச்சை வீடியோ போட்டதும் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். திமுக கூட்டணி வைக்கவில்லையா நாங்கள் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். குறைந்த பட்ச செயல் திட்டம் என்று நிபந்தனையுடன் கூட்டணி வைத்தார்கள்.

அதிமுக என்ன செயல் திட்டத்துடன் கூட்டணி வைத்து உள்ளீர்கள். நீட் ரத்து, பள்ளிக்கல்வி துறைக்கு நிதி வழங்க வேண்டும், கீழடி குறித்த செயல் திட்டம் வகுக்கப்பட்டதா?

நீட் தீர்மானம் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த விட மாட்டேன் என்று தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் தான் பொறுப்பு. அரசு நீதிமன்றத்தை அணுக போகிறது இவ்வாறு கூறினார்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?
  • Leave a Reply