சூறாவளி சுற்றுப்பயணத்தால் கொரோனா பாதிப்பு.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2023, 9:04 am

சூறாவளி சுற்றுப்பயணத்தால் கொரோனா பாதிப்பு.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு கோவை திரும்பிய பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருந்து வந்துள்ளது.

இதை அடுத்து நேற்றைய தினம் அவர் உடல் பரிசோதனை செய்த நிலையில் இன்று அதன் முடிவு வெளியானது. அப்போது வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதைத் தொடர்ந்து அவர் நேற்று பிற்பகல் கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் சூழலில் லேசான தொற்று காரணமாகவே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!