அண்ணாமலை ஜெயிக்கட்டும்! திமுக கதை முடிக்கட்டும் : கவனத்தை ஈர்த்த பாஜக போஸ்டர்… அடுத்த நிமிடமே ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan2 நவம்பர் 2023, 11:50 காலை
அண்ணாமலை ஜெயிக்கட்டும்! திமுக கதை முடிக்கட்டும் : கவனத்தை ஈர்த்த பாஜக போஸ்டர்… அடுத்த நிமிடமே ஷாக்!!
மதுரையில் திமுக எதிரான பாஜகவினர் போஸ்டர் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டும் போது காவல்துறையினர் கைப்பற்றினர்.
மதுரை பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுபிரிவின் மாநிலச் செயலாளர் விளாங்குடி எம்.வீரமுத்து தலைமையில் தத்தனேரி சரவணன், பொன்னகரம் விமல்குமார், திடீர் நகர் சுந்தர், கருப்பாயூரணி அபி ஆகியோர் 60க்கும் மேற்பட்ட போஸ்டர்கள் விளாங்குடி, தத்தனேரி, அருள்தாஸ்புரம் போன்ற இடங்களில் ஒட்டியுள்ளனர்.
ஒட்டப்பட்ட போஸ்டர்களில் கொடி பறக்கட்டும்! இடி ஒலிக்கட்டும்! அலை அடிக்கட்டும்! அண்ணாமலை ஜெயிக்கட்டும்! திமுக கதை முடிக்கட்டும்! அறம் பரவட்டும்! தமிழகம் தலைநிமிரட்டும்! ban_dmk என்ற வசனங்களுடன் அச்சிடப்பட்ட போஸ்டர்களை பாஜகவினர் ஒட்டியுள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
0
0