‘சொத்து வரி உயர்வு மக்களுக்கு தாங்க முடியாத சுமை’: மதுரை பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
8 April 2022, 5:32 pm
Quick Share

மதுரை: சொத்து வரி உயர்வை கண்டித்து மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு அண்மையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், குடியிருப்பு, வணிகக் கட்டடங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டுக் கட்டடங்களின் பரப்பளவுக்கு ஏற்ப சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

இதனை கண்டித்து அன்மையில் அதிமுக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்தும்,ஆளும் திமுக அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Views: - 396

0

0