திரைப்படத்தில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் : நடிகர் சூர்யாவை எச்சரித்த பா.ஜ.க பிரமுகர்!!

16 September 2020, 7:34 pm
Surya Bjp - updatenews360
Quick Share

விருதுநகர் : நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் அரசியலில் நடிக்கக்கூடாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சேவை வார துவக்க விழா அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு கேக் வெட்டி பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பொதுச் செயலாளர் சீனிவாசன், நீட் தேர்வு கூடாது என நினைக்கும் அரசியல் சக்தியான திமுக, கம்யூனிஸ்ட் போன்றவை தற்போதைய சூழ்நிலையை அரசியல் பிரச்சனையாக மாற்றுகிறார்கள் எனவும், நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு என்பது போல மாணவர்கள் தற்கொலை வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.

இறந்த மாணவர்களின் குடும்பத்திற்க்கு பாஜக சார்பாக இரங்கல் தெரிவிப்பதாக கூறிய அவர், அந்த துக்கத்தில் நாங்களும் பங்கு கொள்வதாகவும், +2 தேர்வை எதிர்கொள்ள தயங்கி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் +2 தேர்வை தடை செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.

கல்வியில் பின் தங்கிய குஜாராத், பீகார் மாநில மாணவர்கள் நீட் தேர்வை தைரியமாக எதிர் கொள்ளும் நேரத்தில் தமிழக மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் தமிழக மாணவர்கள் அறிவில் சிறந்தவர்கள் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலையால் திமுக வெட்கப்பட வேண்டும் என கூறினார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் வெளிநடப்பு செய்வது திமுகவின் இசைக்கு தமிழக காங்கிரஸ் ஆடி கொண்டு வருகிறது என்றும், கிசான் ஊழலை வெளிக் கொண்டு வந்தது பாஜக தான். ரஜினி காந்த் கட்சி ஆரம்பிப்பது உறுதியாகவில்லை அவர் கட்சி ஆரம்பிக்க வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

அதிமுக பாஜக நட்பு கட்சிகளாக உள்ளோம். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்வோம். திரைத் துறையில் இருப்பவர்கள் அரசியல் வருவதற்கும் அரசியல் கருத்துக்கள் கூறுவதற்கும் வரவேற்பு அளிக்கிறேன்.

சூரியா மற்றும் அவரது குடும்பத்தினர் எப்பொழுதும் பாஜகவுக்கும் எதிராக கருத்து தெரிவிப்பார்கள். திரைப்படத்தில் சூர்யா நல்ல நடிகர். ஆனால் திரைப்படத்தில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியலில் நடிக்கக்கூடாது அவருக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும் எந்த அரசியல் கருத்தை கல்வியில் கலந்து கூறுவது தவறான செயல் என்று கூறினார்.

சூர்யாவர் தன்னை அரசியல் கட்சி சேர்ந்தவராக மாற்றிக்கொண்டு பேசினால் நாங்கள் கருத்துக்களை வைப்போம். தற்போது சூர்யா பேசி வரும் கருத்துக்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் குறைக்கும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0