பாஜகவில் இணைந்ததால் மோதல்… தெலுங்கு தேசம் அதிருப்தி : கார், பைக்குகள் உடைத்து சேதம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 January 2025, 2:43 pm

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் தர்மவரம் தொகுதியில் போட்டியிட பரிதலா ஸ்ரீராம் ஆர்வமுடன் இருந்தார். ஆனால் கூட்டணியின் ஒரு பகுதியாக தர்மாவரம் தொகுதி பாஜக பெற்றது.

இது தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து போட்டியிட இருந்த பரிதலா ஸ்ரீராமுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும், கட்சியின் உயர்மட்டம் அளித்த உத்தரவின் பேரில், பாஜக வேட்பாளர் சத்யகுமார் யாதவின் வெற்றிக்காக பரிதலா ஸ்ரீராம் கடுமையாக உழைத்தார்.

இதையும் படியுங்க: திரிஷா எடுத்த அதிரடி முடிவு… கைக்கொடுக்கும் விஜய்? ரசகிர்கள் ஷாக்!

பாஜக சார்பில் போட்டியிட்ட சத்யகுமார் யாதவ் முன்னாள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேதிரெட்டி வெங்கடராமிரெட்டியை விட குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தர்மாவரம் தொகுதியில் பாஜக – தெலுங்கு தேசம் இரு கட்சிகளும் தங்கள் கட்சியின் நிலையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை பாஜகவில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தெலுங்கு தேச கட்சியினரை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தர்மவரம் தொகுதி எம்.எல்.ஏவும் பாஜக தலைவரும் அமைச்சருமான சத்யகுமார் யாதவ் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிறுபான்மைத் தலைவர் கிருஷ்ணபுரம் ஜமீர் பாஜகவில் இணைய உள்ளார்.

இதற்காக நகரம் முழுவதும் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது. இதற்கு தர்மாவரம் தொகுதி தெலுங்கு தேசம் கட்சியின் பொறுப்பாளர் பரிதலா ஸ்ரீராம், ஜமீரை பாஜகவில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஜமீர் வைத்த பேனர்களை கிழித்து எறிந்தனர்.

இந்தப் பிரச்சினை தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதலுக்கு வழிவகுத்தது. முதலில் பேனர்களை அகற்றுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு ஸ்கார்பியோ கார்கள் மற்றும் மூன்று பைக்குகள் சேதமடைந்தன.

மறுபுறம், மோதல் குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இரு கட்சியினரையும் கலைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

BJP TDP Clash

தர்மவரம் நகரத்தை போலீசார் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். மீண்டும் பதற்றம் ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் மூடப்பட்டன. போலீசார் அங்கு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?