ஸ்டாலின் படமிருந்தால் மோடியின் படத்தையும் வையுங்க : அதிகாரிகளுக்கு பாஜகவினர் நெருக்கடி!!

Author: Babu Lakshmanan
23 September 2021, 9:19 am
karur - updatenews360
Quick Share

கரூர் : பிரதமர் மோடியின் புகைப்படத்தை மீண்டும் வைக்க வேண்டும் என்றுக் கூறி கரூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.

தமிழகத்தில் தற்போது 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவானது. இதில் கரூர் அடுத்த தான்தோன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே பதவி வகித்து, பின்னர் நடைபெற்ற எம்எல்ஏ தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்து சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற, அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் மீண்டும் களம் இறங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு வந்த பாஜக மாவட்டத் தலைவர் சிவசாமி, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட போர்டில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகளாக இருந்தால், மு.க ஸ்டாலின் படமும் இடம் பெறக் கூடாது, ஆகவே பாரதப் பிரதமர் மோடியின் படத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகமே, மீண்டும் வைக்கவேண்டும் என்று கூறி வெளியேறினார்.

Views: - 346

0

0