பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை… ஓட ஓட விரட்டி கொன்ற மகன்? ஷாக் தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2025, 12:44 pm
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். கொலை செய்யப்பட்டது பட்டுக்கோட்டையை சேர்ந்த சரண்யா என்பவதும், இவர் மதுரை மத்திய தொகுதி பாஜக மகரிணி பெபாறுப்பாளர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படியுங்க: பிரபல தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. பணத்தை பதுக்கி வைத்தாரா? பகீர் பின்னணி!
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் காத்திருந்தன. நேற்று இரவு சரண்யா கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர்.
தலை துண்டித்து கொலை செய்யும் அளவுக்கு என்ன பிரச்சனை? முன்விரோதமா என துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை கபிலன், குகன் உட்பட 3 பேர் சரண்யாவை கொன்றது நாங்கள்தான் என சரணடைந்தனர். விசாரணையில், சரண்யாவின் 2வது கணவரின் மகன் தான் கபிலன் என்பது தெரியவந்தது.
சரண்யாவுக்கு மதுரையை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமாகி 15 வயதில் சாமுவேல், 13 வயதில் சரவணன் என்ற மகன் உள்ளனர். 2021ல் சண்முக சுந்தரம் இறந்துவிட்டதால், பட்டுக்கோட்டையை சேர்ந்த பாலன் என்பவரை 2வதாக திருமணம் செய்து வசித்து வந்துள்ளனர்.

பாலனும் சரண்யாவும், உதயசூரியபுரத்தில் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவு வழக்கம் போல பாலன் மற்றும் சரண்யாவின் மகன் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனங்களில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
சரண்யா கடையை பூட்டி விட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். அப்போதுதான் மர்மநபர்கள் பின் தொடர்ந்து வெட்டியுள்ளனர். இதில் பாலனின் முதல் மனைவிக்கு பிறந்த கபிலன் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
