‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ விழாக் கமிட்டியினரை நச்சரித்தே விருதை வாங்கிட்டாரு ; பிரபல நடிகரை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்!

Author: Babu Lakshmanan
23 December 2022, 10:46 am

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இரவின் நிழல், உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் படம் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என ப்ளு சட்டை மாறன் விமர்சித்து வருகிறார். இதனால், பார்த்திபனுக்கும், ப்ளு சட்டை மாறனுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில், நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக வெளியான இரவின் நிழல், சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், இரவின் நிழல் திரைப்படத்துக்கு ஸ்பெஷல் ஜூரி வர்டும் கிடைத்துள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்த்திபன், இரவின் நிழல் 114 விருதுகளை வாங்கியுள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, பார்த்திபனை வம்புக்கு இழுத்த ப்ளு சட்டை மாறன். “எலே வீரபாகு… ஒருமாசமா.. 115 விருது வாங்கி இருக்கேன்னு தமிழக மக்கள் மற்றும் மீடியாகிட்ட கூசாம பொய் சொல்லிட்டு இருக்கியே. அதை மொத்தமா கண்ணுல காட்டு பாப்போம். அந்த 115 விருதுகளை குடுத்தவங்ககிட்ட பேட்டி எடுத்து போட முடியுமா? அதுல 90% உப்மா விருதுதான?” என கலாய்த்து டுவிட் போட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இரவின் நிழல் படத்துக்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டதை ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கும் சத்யம் தியேட்டரில் ஒருவாரமாக குட்டிபோட்ட பூனை போல சுற்றி.. விழாக்கமிட்டி, ஜுரி, அமைச்சர் என அனைவரையும் நச்சரித்து சிறந்த நடிகர் விருதை வாங்கிவிட்டார் விருது வெறியர். ‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று பலரும் புளிச்சென துப்பி வருகிறார்கள்.

தொந்தரவு செய்து, சிபாரிசு மூலம் அழுத்தம் தந்து சிறந்த நடிகர் விருது வாங்குவது மட்டமான செயல். அடுத்தாண்டு… விகடன் விருது தொடங்கி.. பல விழாக்குழுவினர் வரை நச்சரித்து கொல்லப்போகிறார். எல்லாரும் இவருக்கு ஒரு விருதை மறக்காம தந்துருங்க இல்லன்னா போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடுங்க.

ஹலோ விகடன், கலாட்டா, பிகைண்ட் வுட்ஸ்.. அடுத்து நீங்க நடத்தப்போற 2022 சினிமா அவார்ட்ஸ்ல பெஸ்ட் ஆக்டர் அல்லது பெஸ்ட் டைரக்டர் அவார்டை எனக்கு எடுத்து வச்சிருங்க. இல்லன்னா டெய்லி 10 போன் பண்ணுவேன். ஒத்துவரலன்னா சென்ட்ரல் மினிஸ்டர் மூலம் சிபாரிசுக்கு வருவேன். எப்படி வசதி?” என பார்த்திபனை பங்கமாக கலாய்த்துள்ளார்.

நெட்டிசன்கள் பலர் பார்த்திபனுக்கு ஆதரவாகவும், மேலும் சிலர் ப்ளு சட்டை மாறனுக்கு ஆதரவாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பார்த்திபன் நச்சரித்தும் தொந்தரவு செய்தும் தான் விருதுகள் வாங்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!