அஜித் படத்தை அப்படியே காப்பியடித்த பாலிவுட் படம்.. வைரலாகும் வீடியோ இதோ.!
Author: Rajesh30 May 2022, 2:10 pm
நடிகர் அஜித் நடிப்பில் வேதாளம் படம் 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாகவும்இ ஸ்ருதி ஹாசன் அஜித்திற்கு ஜோடியாகவும் நடித்திருந்தனர்.இந்த படத்தில் சூரிஇ தம்பி ராமையாஇ மயில்சாமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும்இ தமன்னா சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடிக்கின்றனர்.தமிழில் வேதாளம் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான ‘heropanti 2’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சிஇ அப்படியே வேதாளம் படத்தில் உள்ளது போல் இருக்கிறது. இந்த படத்தில் டைகர் ஷெராப் ஹீரோவாக நடித்துள்ளார்.அவருக்கு வில்லனாக நவாசுதின் சித்திக் நடித்துள்ளார்.
Ngommaley dei 😭😭😭😭😭
Ennada Vedhalam padathulendhu laam eduthurkeenga😭😭🥹🥹🤣🤣 pic.twitter.com/wsqpzjDsUu— Arnold Ayyasamy (@abhiiiiiii____) May 27, 2022
வில்லன்களிடம் மாட்டிக்கொண்ட அஜித் அழுவது போல் நடித்து வில்லனிடம் நக்கலாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியேறுவார். அதைபோல் டைகர் ஷெராப்பும் இந்த காட்சியில் செய்திருக்கிறார். இந்த சீசனை பார்த்த தமிழ் ரசிகர்கள், என்ன வேதாளம் படத்தை எடுத்து வச்சிருங்கீங்க என கலாய்த்து வருகின்றனர்.
3
0