மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு : புதுச்சேரியில் பரபரப்பு!!

25 October 2020, 5:16 pm
Wine Shop Bomb- Updatenews360
Quick Share

புதுச்சேரி : தனியார் மதுபான கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்த போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்,
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலிசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் வெடிகுண்டு வீசிய மூன்று நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சார்லி உட்பட 2 பேரை கைது செய்த போலிசார் அவர்கள் வீட்டில் அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியில் ஏதேனும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்துள்ளார்களா என்று மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழு உடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் கைது செய்தவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலிசார் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அவர்கள் எதற்காக வெடிகுண்டு வீசினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

Views: - 5

0

0