‘எம்.ஜி.ஆர் பாட்டு போடலைன்னா பெட்ரோல் குண்டு வீசுவேன்’: கோவை அகில இந்திய வானொலி நிலையத்திற்கு மிரட்டல்..!!

Author: Rajesh
25 February 2022, 9:49 am

கோவை: எம்.ஜி.ஆர் பாடல் ஒலிபரப்பாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும், இதனால் உங்கள் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவோம் என்றும் கோவை ஆல் இந்தியா ரேடியோவுக்கு மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை திருச்சி ரோடு ராமநாதபுரத்தில் ஆல் இந்திய ரேடியோ நிலையம் உள்ளது. நேற்று இந்த ரேடியோ நிலையத்திற்கு ஒரு தபால் கார்டு வந்தது. அந்த தபால் கார்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று ரஜினி பாடல்களை ஒலிபரப்பியதாகவும், ஆனால் எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று எம்ஜிஆர் பாடலை ஏன் ஒலிபரப்பவில்லை? இதனை கண்டித்து ரேடியோ நிலையம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவோம் என்று அந்த தபால் கார்டில் எழுதப்பட்டுள்ளது .

இந்த கார்டை பார்த்த ரேடியோ நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த கார்டை கைப்பற்றியதுடன் ரேடியோ நிலையத்திற்க்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர்.

தபால் கார்டு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தீவிர எம்ஜிஆர் ரசிகர் என்று கூறப்படுகிறது. அவர் யார்? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். நேற்று கோவையில் தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மிரட்டல் கார்டு வந்துள்ளதால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?