இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 2வது முறையாக வந்த மிரட்டலால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2025, 2:09 pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: அமித்ஷா ஓகே சொல்றாரு.. இல்லைனு இபிஎஸ் சொல்கிறார் : இதுலயே தெரியல : திருமாவளவன் விமர்சனம்!
இதையடுத்து, அவரது வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியாக இருந்தது தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு, சேலத்தில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர், அது மற்றொரு புரளியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.