ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : தொடர்ந்து மிரட்ட விடுத்த நபர் கைது !!

15 September 2020, 1:28 pm
Erode Coll office - updatenews360
Quick Share

ஈரோடு : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு தொலைபேசி அழைப்பு விடுத்த மர்ம நபர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறி விட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் தெரிவித்த நபர் குறித்து விசாரணை நடத்திய தெற்கு காவல் துறையினர் துடுப்பதி அருகே உள்ள நபரை கைது செய்து விசாரணை செய்தனர்.

இவர் மதுபோதையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.இவர் பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி பகுதியை சேர்ந்த கௌரி சங்கர் என்பதும் இவர் இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு பெருந்துறை காவல்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது