கோவையில் பல இடங்களில் குண்டுவெடிப்பு மிரட்டல் – பீதியில் பொதுமக்கள்!

Author: Shree
12 November 2023, 10:11 am

கோவையில் பல முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாடு முழுவதும் தீபாவளி திருநாளை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவை நகர மக்களை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடமுடியாத அளவிற்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், கோவையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு நேற்று ஒரு மிரட்டல் இமெயிலில் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இசக்கி என்ற பெயரில் வந்துள்ள அந்த ஈமெயிலில் மோடி ஒழிக, பாஜக அலுவலகம் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதால் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோவை நகரம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை ரயில் நிலையம், விமானநிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவை நகர மக்கள் பெரும் பீதியில் இருக்கின்றனர்.

பின்னர் அந்த மிரட்டல் இமெயில் எங்கிருந்து வந்தது என துரித விசாரணை மேற்கொண்டதில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த இசக்கி என்பவரது இமெயில் முகவரி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் கூறுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!