மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி மாணவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!
Author: Udayachandran RadhaKrishnan19 April 2025, 4:41 pm
சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் 3ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நடந்து சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த ஜங்சன் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையும் படியுங்க: முதலாளிக்கு குளிர்பானத்தில் விஷம்… துரோகம் செய்த சிறுவன் : அதிர்ச்சி சம்பவம்!
வெள்ளத்தில் இருந்ததால் அறியாத சிறுவன் நடந்து சென்ற போது திடீரென மின்சாரம் தாக்கி உயயிருக்கு போராடினான். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்.
இது தொடர்பான வீடியே வைரலான நிலையில், சிறுவனை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க இளைஞருக்கு நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து இளைஞர் கண்ணன் கூறியதாவது, சிறுவனை காப்பாற்றும் போது மின்சாரம் என்னையும் தாக்கியது, சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் உயிரை பணயம் வைத்தேன் என கூறினார்.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், ரியல் ஹீரோ கண்ணன் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.