உல்லாச உறவில் இருந்து விலகிய கள்ளக்காதலி ஓட ஓட விரட்டிக் கொலை : கள்ளக்காதலன் எடுத்த விபரீத முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2025, 11:54 am

வேலூர் மாவட்டம் வேலூர் சின்னஅல்லாபுரம் கே. கே. நகர் திரவுபதியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு(33) இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொணவட்டம் மதீனா நகரை சேர்ந்த ஜான்பாஷா என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் ஏதும் இல்லை.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வந்து வசிக்கத்தொடங்கினார்.

தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை செய்து வந்தார் . அதே கம்பெனியில் வேலூர் விருபாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ்(35) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களது உறவு சபீனாவின் பெற்றோருக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

Boy Friend Kill his Girl Friend Due to illegal relationship

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு வரவில்லையாம் தொடர்ந்து சபீனாபானுவும் சுரேஷூம் போனில் பேசி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சபீனாபானு சுரேஷூடன் பேசுவதை நிறுத்தி விட்டாராம்.

பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு வந்து, அவரிடம் ‘ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.

வேறு யாருடனாவது தொடர்பில் உள்ளாயா?’ என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு சபீனாபானு, ‘இப்போது பேச வேண்டாம் எதுவாக இருந்தாலும் நாளை காலை பேசிக் கொள்ளலாம்.

இப்போது சென்று விடு’ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இதில் இருவரையும் சுரேஷ் இரும்பு ராடால் தலையில் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர் விழுந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பியோடியுள்ளார் .

அவரை துரத்திச் சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார்

இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார் உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார் . இந்த சம்பவம் குறித்து தகவல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுரேஷின் மொபைல் போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்

அங்கு தனது அறையில் பேனில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் சடலமாக கிடந்தார் தனது கள்ளக்காதலி சபீனாபானுவை கொலை செய்த
பின்னர் வீட்டுக்கு திரும்பிய சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்

காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை கொன்று விட்டு கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • kamal haasan said that dont forget we are all dravidians in thug life promotion ஹிந்திக்கு எதிராக பேசி வம்பிழுத்த கமல்- பட புரொமோஷன்லையும் அரசியலை விடமாட்டிக்கிறாரே!
  • Leave a Reply