பட்டப்பகலில் சேவல் திருடிய சிறுவர்கள்…குடியிருப்பு பகுதியில் துணிகரம்: அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

Author: Aarthi Sivakumar
21 January 2022, 12:35 pm
Quick Share

கோவை: துடியலூர் அருகே பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்து சேவல் திருட்டில் ஈடுபடும் 3 சிறுவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மேய்வதற்க்காக வெளியே சென்ற சுமார் 6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளை நிற சேவல் ஒன்று திரும்பி வராமல் இருந்துள்ளது.

இதையடுத்து அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் இரு சக்கரவாகனத்தில் வரும் 3 சிறுவர்கள் அங்கு மேய்ந்துகொண்டிருந்த வெள்ளை நிற சேவலை துரத்திப் பிடித்து அதை தங்களது இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து சுரேஷ்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட சிறுவர்களை தேடிவருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுமான பணிக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இரவில் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் பட்டபகலில் திருட்டில் ஈடுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Views: - 277

0

0