இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் : கோவையில் அதிர்ச்சி!!

1 November 2020, 3:22 pm
Minor Girls Harrassment - Updatenews360
Quick Share

கோவை : 9 மற்றும் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரு சிறுவர்களை போலீசார்,போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த 9 மற்றும் 10 வயது சிறுமிகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 14,15 வயது ஆன சிறுவர்கள் இருவர் விளையாடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது இரு சிறுவர்களும் இணைந்து இரு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வழக்கமாக விளையாட போகும் தனது 10 வயது சிறுமி, விளையாட போகாமல் இருந்ததையடுத்து, காரணம் குறித்து பெற்றோர்கள் கேட்கையில், 10 வயது சிறுமி நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக 10 வயது சிறுமியின் தாயார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு சிறுமிகளை விசாரித்த காவல்துறையினர், சம்பவத்தை உறுதி செய்ததையடுத்து, வழக்குப் பதிவு செய்து இரு சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

மேலும் இருவரும் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என்பதால் இருவரையும் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்‌. மேலும் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 21

0

0