சத்ரபதி சிவாஜியின் 9 அடி சிலை உடைப்பு… படையெடுத்த இந்து முன்னணியினர் : போலீஸ் குவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan9 ஏப்ரல் 2023, 6:51 மணி
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோயிலிலை தொட்டு கோயில் குளம் உள்ளது.
இந்த குளத்தின் அருகாமையில் கடந்த 15 -ஆண்டுகளுக்கு மேலாக சத்ரபதி வீர சிவாஜியின் 9 -அடி சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் ராம நவமி ,விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்த சிலையை நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து தலைப்பாகத்தை அடித்து உடைத்து உள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை முதல் காட்டு தீ போல் பரவியது.
இதை அடுத்து ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். இதைக் கேள்விப்பட்டது போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர்.
மேலும் ஆலய தலைவர் நடராஜன் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை வருவதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
0
0