மின் இணைப்பு வழங்க ரூ.10,000 வரை லஞ்சம் : உதவி செயற்பொறியாளர் பணியிட மாற்றம்!!

Author: Babu Lakshmanan
23 August 2022, 9:57 pm

சமூக வலைதளங்களில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலான நிலையில், பள்ளிகொண்டா மின் பகிர்மான கோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவர், வெட்டுவானம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை புரோக்கராக வைத்து மின் இணைப்பு பெற வரும் பொது மக்களிடம் இருந்து மின் இணைப்பு வழங்க 5000-10,000 வரை  லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

இதனிடையே கடந்த 19-ம் தேதி கார்த்திகேயன் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவியது.

இந்த நிலையில் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயனை பொன்னை மின்பகிர்மான  கோட்ட உதவி செயற் பொறியாளராக பணியிடை மாற்றம் செய்து முதன்மை பொறியாளர் மணிகண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?