ஸ்வீட் வாங்க போன மாப்பிள்ளை.. முதலிரவுக்கு தயாரான பெண் : இழவு வீடாக மாறிய திருமண வீடு.!!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2025, 6:02 pm
ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாயி மாவட்டம், சோமந்தூர்பள்ளியில் திருமண வீடு சாவு வீடாக மாறியுள்ளது.
22 வயது இளம்பெண் ஹர்ஷிதாவுக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த நாகேந்திராவுக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. ஆனால், தாலியின் மஞ்சள் ஈரம் காய்வதற்கு முன்பே, புதுப்பெண்ணின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.எப்படி நடந்தது இந்த சோகம்?
திருமண விழா தடபுடலாக நடந்து முடிந்தது. உறவினர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர், விருந்து பரிமாறப்பட்டு, ஊரே பாராட்டும் வகையில் ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்தன. முதலிரவுக்காக மணமகள் வீட்டில் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன.
இதற்கிடையே, மணமகன் நாகேந்திரா ஸ்வீட் வாங்க கடைக்குச் சென்றார். திரும்பி வந்தபோது, தனது மனைவி ஹர்ஷிதாவைக் காணவில்லை. உறவினர்கள் அறையைத் தேடியபோது, கதவு திறக்கப்படவில்லை. பதறிப்போன உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மின் விசிறியில் கயிறு கட்டி ஹர்ஷிதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ந்தனர்.

மருத்துவமனையில் முடிந்த நம்பிக்கை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹர்ஷிதா, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி, உறவினர்களையும், அங்கிருந்தவர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது. திருமண மகிழ்ச்சி, ஒரு நொடியில் சோகமாக மாறியது.
புதுப்பெண்ணின் இந்த விபரீத முடிவுக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
