வீட்டில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து : தீயாய் செயலாற்றிய தீயணைப்புத்துறை!!
28 January 2021, 3:25 pmகன்னியாகுமரி : இரவிபுதூர்கடையில் வீட்டில் குளிர்சாதனபெட்டி வெடித்து தீவிபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு எரிவாயு சிலிண்டரை அகற்றியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை ஜின்னா தெருவை சேர்ந்தவர் கபீர். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி பசீலா மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் வசிந்து வந்த நிலையில் இன்று காலையில் வீட்டின் சமையலறையிலிருந்து புகை வந்தது.
இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது வீட்டின் சமையலறையில் தீ எரிவதை கண்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அப்பகுதியினர் குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு முதற்கட்டமாக வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை அகற்றினர். இதனால் பெரும்விபத்து தவிர்க்கபட்டது. பின்னர் பற்றி எரிந்த தீயினை அணைத்தனர்.
அடர்ந்த குடியிருப்பு பகுதியில் வீட்டில் தீபிடித்ததால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் காணபட்டது. இந்த விபத்து குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்தவிபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது .
0
0