மாமனாவது… மச்சானாவது : நிலத் தகராறில் அக்கா மற்றும் அவரது கணவரை பட்டாகத்தியால் வெட்டிய தம்பி… வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 12:29 pm
Villupuram Murder - Updatenews360
Quick Share

விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள ஆயந்தூர் கிராமத்தை சார்ந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது சகோதரரான அரிகிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்திற்கு அருகிலுள்ள ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் அரிகிருஷ்ணணை அவரது சகோதரியின் கணவரான அய்யனார் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த அரிகிருஷ்ணன் 15 ஆம் தேதி மாலை ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டா கத்தியுடன் வந்து சகோதரி ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து கை தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.

இதனால் காயமடைந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது கணவர் அய்யனார் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரி மற்றும் அவரது கணவரை அய்யனார் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை சகோதரன் பட்டா கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 528

0

0