உன் மேட்டரை வெளியே சொல்லிடுவேன்.. தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2025, 4:24 pm
பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் சொந்த வீட்டில் சொந்த தங்கையை அண்ணனே கற்பழித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குஜராத் பாவ்நகர் பகுதியில் வசித்து வந்தது ஒரு குடும்பம். சொந்த தங்கை என்று பாராமல் 22 வயது தங்கையை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் கொடூர அண்ணன்.
அவனுக்கு 29 வயதாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தங்கை அதே ஊரை சேர்ந்த இளைஞரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையறிந்த அண்ணன், உன் காதலை வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

மற்றுமொரு சந்தர்ப்பத்திலும், கத்தியை காட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளான். மேலும் பெண்ணின் தொடையில் சிகரெட் சூடு வைத்தும் கொடூரமாக கற்பழித்துள்ளான்.
பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கத்தி, ஆடைகளை பறிமுதல் செய்து, பெண்ணின் சகோதரன் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
