தமிழக சட்டப்பேரவையில் நாளை 2021 – 22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் : முதன்முறையாக காகிதம் இல்லா நிதிநிலை அறிக்கை தாக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2021, 12:24 pm
TN Budget -Updatenews360
Quick Share

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக நாளை சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை செய்யப்படுகிறது.

கொரோனா காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. நாளை பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடனில் தவிக்கும் தமிழகம்.. "பொருளாதார புலி" பழனிவேல் தியாகராஜனுக்கு  நிதியமைச்சர் பதவி.. ஸ்டாலின் செம | PTR Palanivel Thiagarajan is the finance  minister of Tamil nadu ...

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். முதன்முறையாக காகிதம் இல்லா இ-பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் ஆக.16 தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 218

0

0