மழை காலங்களில் சிமெண்ட் தேவையே இருக்காது… அப்படியிருந்தும் ரூ.120 விலை உயர்வு ஏன்…? கட்டுமான சங்கத்தினர் கேள்வி..

Author: Babu Lakshmanan
17 November 2023, 5:56 pm

காரணமே இல்லாமல் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு கட்டுமான சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை பிரஸ் கிளப்பில் கட்டுமான சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் பேசியதாவது:- சிமெண்ட் விலையை பொறுத்தவரையில் தேவையில்லாமல் ஒரு மூட்டைக்கு ரூ.120 உயர்த்தியுள்ளனர். காரணமே இல்லாமல் ரூ.70 மற்றும் ரூ.50 வரை அதிகரித்துள்ளனர். மழை காலங்களில் சிமெண்ட்டின் தேவையே இருக்காது. தேவையே இல்லாத சமயத்தில் சிமெண்டின் விலை உயரக் காரணம் என்ன..?

இந்த விலை உயர்வுக்கு எங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். சிமெண்ட் இல்லாமல் எந்தவொரு பணிகளும் நடைபெறாது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிமெண்ட்டின் விலை மீண்டும் பழைய விலைக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://vimeo.com/885632774?share=copy

மழை காலங்களில் சிமெண்ட்டின் விலை எப்போதும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இந்த முறை ரூ.100 உயர்ந்துள்ளது, என தெரிவித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!