ரூ.12 லட்சம் மதிப்பில் தொழிற்சங்க கட்டிடம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
28 November 2020, 10:39 amகோவை: ரூ.12 லட்சம் மதிப்பில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க கட்டிடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தந்து வைத்தார்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல அலுவலகம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்துள்ளது.
அதே பகுதியில் இயங்கி வரும் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க அலுவலகக் கட்டடம் பழுதடைந்திருந்தது.
தொடர்ந்து ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பணிகள் முழுவதும் முடிவடைந்ததால் புதிய அலுவலகத்தை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அங்கு உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் இந்த நிகழ்ச்சியில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பிஆர்ஜி அருண்குமார், ஆறுகுட்டி, ஓகே செல்வராஜ், மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சரை வரவேற்க தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0
0
1 thought on “ரூ.12 லட்சம் மதிப்பில் தொழிற்சங்க கட்டிடம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.”
Comments are closed.