7 மாதங்களுக்கு தமிழக – கர்நாடகா இடையே பேருந்து : வேப்பிலை கட்டி இயங்கிய தனியார் பேருந்து!!

12 November 2020, 11:14 am
Karnataka Bus - Updatenews360
Quick Share

ஈரோடு : ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடகா பேருந்துகள் இயக்கப்பட்டது.

கொரானா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதியன்று சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடகா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்வது நிறுத்தப்பட்டது.

தமிழகம் – கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான இரு மாநில போக்குவரத்து ஏழு மாதங்களாக தடை செய்யப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று காலை எட்டு மணிக்கு மீண்டும் போக்குவரத்து துவங்கப்பட்டது.

இன்று முதல் ஆறு நாட்களுக்கு மட்டும், தினமும் மூன்று அரசு பேருந்துகள் கர்நாடகாவுக்கு இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதே போல இரண்டு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது.

கர்நாடகாவில் இருந்தும் இன்று காலை முதல் தமிழகத்திற்கு கர்நாடக அரசின் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இரு மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பேருந்தில் வேப்பிலை கட்டியும், முகக்கவசம் அணியச் சொல்லியும் அறிவுறுத்தி, பயணிகளை ஏற்றிச் சென்றனர்.

Views: - 23

0

0