தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை : மதியம் 12 மணி முதல் தொடக்கம்!!

26 November 2020, 11:17 am
Distict Bus - Updatenews360
Quick Share

நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து 7 மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதி தீவிர புயலாக நகர்ந்து பின்னர் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தாலும் காற்றும் மழையும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நகரின் சேலான தூறலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அரசுப் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இன்று மதியம் 12 மணி முதல் 7 மாவட்டங்களில் அரசுப் பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விழுப்புரம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.

Views: - 25

0

0