தமிழகத்தில் பேருந்துகள் இயக்க முடிவு : தேதி குறித்து வெளியான தகவல்!!

20 August 2020, 11:19 am
Bus Starts- Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்தை அடுத்த மாதம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டள்ள பொது போக்குவரத்து சேவையை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இ-பாஸ் தளர்வு எளிமையாக்கப்பட்டத்தில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

மேலும் வேலைக்கு செல்பவர்கள், வேலை தேடி வருவபவர்கள் சென்னைக்கு படையெடுக்க துவங்கியுள்ளதால் கொரோன குறைவான பகுதிகளில் பேருந்து சேவை இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வேலை தேடி செல்லும் மக்கள், பொது போக்குவரத்து இருந்தால் தான் வேலைக்கு செல்ல முடியும் என சூழ்நிலையில் உள்ள மக்கள் பொது போக்குவரத்து சேவைக்காக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தொற்று குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மண்டல வாரியாக அடையாளங்கள் காணப்பட்டு போக்குவரத்து வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Views: - 0

0

0