கடைகளை திரும்ப வழங்க கோரி முதலமைச்சரை சந்திக்க நடைபயணம்: டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது!!

Author: Rajesh
5 May 2022, 1:37 pm

தங்கள் கடைகளை தங்களுக்கே வழங்க வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க சென்னை நோக்கி நடைபயணம்- டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் கைது.

கோவை பெரியகடைவீதியில் செயல்பட்டு வரும் டி.கே.மார்க்கெட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் காய்கறி பழங்கள் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்க்கெட்டில் கடைகளை ஏலம் எடுத்துள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் காலியாக இருந்த இடத்தில் கடைகள் அமைத்து தருவதாக முந்தைய அதிமுக ஆட்சியில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆனால் கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு முன்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், கோவை மாநகராட்சி சார்பில் அக்கடைகளை டெண்டர் மூலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பால் தங்கள் கடைகள்(88 கடை வியாபாரிகள்) தங்களுக்கு கிடைக்காது என்றும் முதல்வர் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகளை தங்களுக்கே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று கோவையில் இருந்து முதலமைச்சரை சந்திக்க சென்னை அண்ணா சமாதி வரை குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொள்ள போவதாக காய்கனி சிறுவியாபாரிமள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அறிவித்ததை போல் இன்று கோவை அண்ணா சிலை அருகில் இருந்து குடும்பத்துடன் நடைபய்ணம் மேற்கொள்ள முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்குற்கு அழைத்து சென்றனர். நடைபயணம் மேற்கொள்வதற்கு முன்பு அவரது கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் கலந்து கொண்டு உங்களது கோரிக்கையை தாங்களும் முதலமைச்சரிடம் தெரியபடுத்துகிறோம் என தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?