சென்னை அண்ணா சாலையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து : 20க்கும் மேற்பட்டோர் கைது!!

2 July 2021, 6:16 pm
Taxi Drivers Protest - Updatenews360
Quick Share

சென்னை : பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து அண்ணா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

விலைப்பட்டியல், கமிஷன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சென்னை சேப்பாக்கத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கால் டாக்சி ஓட்டுநர்கள் கூட்டம் அதிகமாக சேர்ந்ததால் காவல்துறையினர் சிலரை கைது செய்துள்ளனர். காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து அண்ணாசாலையில் தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டு அருகே போராட்டத்தைத் தொடர்ந்த காரணத்தினால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அதிவிரைவு படையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி கலைக்க முற்பட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 132

0

0