அடுக்கடுக்காக சொன்ன அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? திருமாவளவன் சவால்..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2025, 4:24 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில், ஜூன் 14ம் தேதி, நாளை மாலை 4 மணி அளவில் அண்ணா ஸ்டேடியம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதசார்பின்மை காப்போம் பேரணி தொடங்குகிறது.

பேரணி டிவிஎஸ் டோல்கேட் ரவுண்டானா, மகாத்மாகாந்தி சிலை, பெரும்பிடுகு முத்திரையர் சிலை ஆகியவற்றை கடந்து மாநகராட்சி அலுவலகத்தில் பேரணி முடிவடைகிறது. தமிழகம் முழுவதிலிருந்து முன்னணி பொறுப்பாளர்கள் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்கின்றனர்.

அகில இந்திய அளவில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு கோட்பாட்டை காக்க வேண்டும் என்று அரை கூவல் விடுவதற்கான பேரணி தான் இந்த பேரணி.

ஆர் எஸ் எஸ் போன்ற மதசார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரான யுத்தம் தான் இந்தப் பேரணி. பாஜக தேர்தலை பயன்படுத்தி முருகா பக்தர்கள் மாநாடு நடத்துகிறது.
பாஜக அரசியலில் கால் வைக்க கூடாது.

கூட்டணி கட்சிகள் தலைமைத்துற்ற கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அந்த நேரத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் உள்ளது. நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியில் நலம் முதன்மையானது.

திமுகவுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதே போல கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம், கோரிக்கையாக வெளிப்படுத்தி இருக்கும் இன்றைக்கும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை.

மாயத் தோற்றத்தை ஏற்படுத்த பார்க்கின்றார்கள் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த பார்க்கின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் வெளிய உள்ளார்கள் அவர்களையே உள்ளே இனைக்கவில்லை.

அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்துவிட்டார். கூட்டணி தயாராக இல்லை அதிமுக இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை. அண்ணாமலை இல்லாமல் தேர்தல் நடப்பது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்து மற்ற கட்சிகளையும் இணைத்து தேர்தலை சந்திக்கக் கூடாது என அவர் நினைக்கிறார்.

நாங்கள் சமமான வலிமை பெரும் வரை இதுபோன்ற நிபதனைகளை கூற முடியாது. நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை இந்த தேர்தலில் ஆவது திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை முழுவதும் மூடுவது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தற்காலிகமாக மூடுதல் என்பது இது தற்காலிகமான நிலைப்பாடு, இதில் உடன்பாடு இல்லை. தமிழ்நாடு மட்டிலும் இல்லை, தேசிய அளவில் மதுக்கடைகள் மூட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு ஆகும்.

காங்கிரஸ் மது விளக்கு கொள்கையை தீவிரமாக கையில் எடுக்க வேண்டும். இதனால் இளந்தலைமுறையின்ஆற்றல் சிதைகிறது. எங்கெல்லாம் அரசு இருக்கிறதோ அங்கு ஊழல் உள்ளது. ஊழல் என்பதை சொல்லி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது என்பது சொற்பமான நிகழ்வுகள் தான்.

அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டு சொல்லி இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் முன் வைக்கட்டும் மக்களிடத்தில் எடுத்து வைக்கட்டும், விசாரணைக்கு கொண்டு செல்லட்டும், ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!