திடீர் பரபரப்பு… முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நிகழ்ச்சிகள் ரத்து : காரணம் என்ன?

11 July 2021, 8:37 am
Stalin - Updatenews360
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் திடீர் ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளது.

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் வெளியூர் செல்வதை தவிர்த்து வரும் அவர், தினமும் தலைமை செயலகத்திற்கு தவறாமல் வருவது வழக்கம். தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுவிடுவார்.

பின்னர் மாலை நேரம் மீண்டும் தலைமை செயலகத்திற்கு வந்து பணியாற்றும் அவர், இரவு நேரம் வரை பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம். தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் தினமும் இரண்டு துறைகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 10.15 மணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைஇ வேளாண்துறை ஆய்வு கூட்டங்களை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதே போல நேற்று முதலமைச்சர் பொதுநிவாரண நிதி, நிதியுதவி அளிப்போருடனான சந்திப்பு இருந்தது.

ஆனால் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகம் வரவில்லை. இதனால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. முதல்வருக்கு உடல்நிலை சோர்வு காரணமாக வரவில்லை என தகவல் வெளியானாலும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை

Views: - 153

0

0