மருத்துவ சேவையை மூச்சாகக் கொண்ட டாக்டர் சாந்தா காலமானார்
19 January 2021, 10:11 amமருத்துவ சேவைக்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்.
திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி (93 வயது) காலமானார். அவரது உடல் இன்று பழைய அடையாறு மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது.
மருத்துவ சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான உயரிய விருதுகளை டாக்டர் சாந்தா வென்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தவர் டாக்டர் சாந்தா.
புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். உலகில் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோயிக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை இவர் உடனடியாக, அடையாறு மருத்துவமனையில் அறிமுகப்படுத்துவதை தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்.
0
0