தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க முடியாது : கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 5:54 pm

பரோல் பல காரணங்களுக்கு வழங்கலாம் என்ற விதி இருந்தாலும், கருத்தரிப்பு காரணத்தை கூறி பரோல் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையில் தொடர் குண்டுவெடிப்பு வழக்ககில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்க கோரி அவரின் மனைவி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு குறித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, அசாதாரண காரணங்களுக்கு பரோல் வழங்க விதிகள் வகை செய்துள்ளது. குழந்தைகள் இல்லை என்றால் கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம்.

ஆனால் ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் கருத்தரிப்பு காரணத்தை கூறி பரோல் வழங்க முடியாது என கூறினர். மேலும் சாதாரண மக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை தண்டனைக் கைதிகள் அனுபவிக்க அனுமதிக்க முடியாது என்றும், அப்படி அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டுள்ள குடிமக்களுக்கும், சட்ட விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என கூறி பரோல் வழங்க மறுத்தனர்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?