இனி ஒரு வருடத்திற்கு ஜாமீன் கோர முடியாது : பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டாஸ்!!

6 July 2021, 11:38 am
Pubg Madhan - Updatenews360
Quick Share

சென்னை : ஆபாச பேச்சு, சிறுவர் சிறுவர்களிடம் பணம் மோசடி போன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

யூடியூப்பில் ஆபாசப் பேச்சுகள் பேசியதாக பப்ஜி மதன் மீது பல புகார்கள் வந்தன. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்ஜி மதனை தேடி வந்த நிலையில், தலைமறைவான மதன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் கைது செய்யப்பட்டான்.

இதனிடையே மதனின் யூடியூப் சேனல் நிர்வாகியாக இருந்த அவரது மனைவி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளி வந்தார். மேலும் ஜாமீன் கோரி மதன் மனுதாக்கல் செய்து இருந்தார். நேற்று இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட புகார்களில் கைதாகி சிறையில் உள்ள மதன் மீது குண்டர் பாய்ந்தது. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதால் ஓராண்டுக்கு மதனுக்கு ஜாமீன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 97

0

0