ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…!
9 September 2020, 11:20 amஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனால் நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கான கல்வி ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தொடர்ந்து மொபைல் ஃபோன் பயன்படுத்துவதால் மாணவர்கள் கண் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச வலைதங்களை தேடுவதாகவும் குறிப்பிட்டு ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது, ஆன்லைன் வகுப்பிற்கு தடை விதிக்க முடியாது எனவும் அப்படி செய்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கு வகுப்புகள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள கால அளவை மட்டுமே பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பு தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0
0