ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது : ட்ரோன் மூலம் கண்காணிக்கும் திருப்பூர் போலீஸ்!!

15 May 2021, 12:02 pm
Drone Police - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடத்தின் முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் இன்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அறிவித்த நேரத்தை மீறி பொதுமக்கள் வெளியில் நடமாடுகின்றார்களா வாகன போக்குவரத்து உள்ளதா என பல்லடம் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் பேருந்து நிலையம், மங்கலம் சாலை, கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 124

0

0