தாராபுரம் அருகே மரத்தின் மீது மோதி கார் விபத்து : சகோதரர்கள் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2021, 8:09 pm
Brothers Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் வடக்கு நகரைச் சேர்ந்தவர் எம்.நரேன் (வயது 23), இவரது தம்பி சுரேன் (வயது 22), இவர்களது நண்பர்களான பொங்கலூரைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 22), திருப்பூரைச் சேர்ந்த எல்.நவீன் (வயது 22), எல்.லோகநாதன் (வயது 23), இந்த 5 பேரும் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக காரில் கொடைக்கானல் சென்றுள்ளார்.

இதன் பிறகு காரில் மீண்டும் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை நரேன் ஓட்டி வர மற்ற நான்கு பேரும் காரில் அமர்ந்திருந்தனர். இந்தக்காரானது தாசாநாயக்கன்பட்டி அருகே வந்தபோது ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நரேன், அவரது தம்பி சுரேன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரி்ழந்தனர். இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ்குமார், நவீன், லோகநாதன் ஆகிய 3 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 713

2

0