கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி.. உளவுபிரிவில் திடீர் மாற்றம் : கோவை மாநகர காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 2:16 pm
Cbe Commissioner -updatenews360
Quick Share

மதவாத குற்றங்களை கட்டுப்படுத்த உளவு பிரிவுக்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்து ஜமேஷா முபின் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக அவரது உறவினர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கார் வெடிப்பு சம்பவம் நடந்ததை முன் கூட்டியே கண்காணிக்க உளவுத் துறை தவறிவிட்டதாக கூறப்பட்டது. கோவை நகரில் மதவாத குற்றங்களை கண்காணிக்க பி.ஆர்.எஸ் வளாகத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளது.

இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 7 போலீசார் உள்ளனர். அவர்கள் தகவலை சேகரித்து துணை சூப்பிரண்டுக்கு தெரிவிக்கிறார்கள். இதே போல் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் கட்டுப்பாட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளது.

இதில் 1 உதவி ஆணையர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 8 போலீசார் உள்ளனர். தற்பொழுது உதவி ஆணையர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கிடையே தகவல்களை சேகரிப்பதற்காக புலனாய்வு பிரிவுக்கு தற்காலிகமாக ஆயுதப்படை போலீசார் 7 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கோவையில் உளவுத் துறைக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: எஸ்.ஐ.சி.க்கு கூடுதல் பலம் சேர்ப்பதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 1 இன்ஸ்பெக்டர் பதவி 22 போலீசார் பணியிடங்களை உருவாக்க உள்ளோம்.

இன்ஸ்பெக்டர் நிர்வாகப் பணியை மேற்கொள்வார். அந்த பிரிவில் உள்ள 30 போலீசாரும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை கண்காணித்து தகவல்களை சேகரிப்பார்கள். இவ்வாறு அவர் அவர் கூறினார்.

Views: - 231

0

0